பேராசிரியர் க.ப.அறவாணன் (முன்னைத் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
தக்கார் தகவு இல்லர் என்பது இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை அவரவர் எச்சத்தால் காணப்படும். அவரவருடைய மக்களால் அறியப்படும். தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின் 'அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றார். எச்சம் என்னும் சொல், மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். அதனால், மக்கள் என்னுஞ்சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவுமுடையதாம் 'யோக்கியர்' என்னும் வடசொல் வழக்கூன்றியதால், தக்கார் என்னும் தமிழ்சொல் வழக்கற்றதென அறிக.
-தேவநேயப் பாவாணர்